சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரவ்

சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரவ்

1 mins read
3c7d4525-368c-4c04-a128-71506f78d2e6
ஆரவ். - படம்: ஊடகம்

‘ஆரவ் ஸ்டூடியோ’ என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் நடிகர் ஆரவ்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், அடுத்து திரையுலகில் அடியெடுத்து வைத்ததும், ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘கலக தலைவன்’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’, ‘ராஜபீமா’ ஆகிய படங்களில் நடித்தார்.

எனினும், ஆரவ் எதிர்பார்த்த வெற்றியும் புது வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை.

கடைசியாக அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்திருந்த ஆரவ், தற்போது திரைப்பயணத்தின் அடுத்த கட்டமாக சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

“திரையுலகில் இதுவரை சொல்லப்படாத எதார்த்தமான கதைகளை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்.

“கடவுளின் அருளும் ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எனது திரைப்பயணத்தைப் பெருமையுடன் தொடங்குகிறேன்,” என்கிறார் ஆரவ்.

குறிப்புச் சொற்கள்