சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் சிறப்புக் காட்சியை ராணுவ அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘அமரன்’.
இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. காஷ்மீரில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.
இதற்கு ராணுவ வீரர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனராம். அவர்கள் இல்லாமல் முக்கியமான காட்சிகளை படமாக்கி இருக்க முடியாது என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், ராணுவ வீரர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்காக ‘அமரன்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
ராணுவ அதிகாரிகளுடன் சிவாவும் சாய் பல்லவியும் இணைந்து சிறப்புக் காட்சியைக் கண்டு ரசித்தனர்.