என் வாழ்க்கையை மாற்றியகலைஞர்: எம்.எஸ். பாஸ்கர்

என் வாழ்க்கையை மாற்றியகலைஞர்: எம்.எஸ். பாஸ்கர்

1 mins read
f80544a8-53ac-4ddb-8965-52443f346b9f
எம். எஸ். பாஸ்கர். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் மூத்த நடிகராக வலம் வருபவர் எம் எஸ் பாஸ்கர். அவருக்குப் படங்களில் நடிக்க வாய்ப்பில்லாத நேரத்தில் நண்பர் ஒருவர் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக அண்மையில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

அந்த நாடகத்தில் 4 வாரம் மட்டுமே நடிக்க இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். முதல் வாரத்தில் வெளியான அந்த நாடகத் தொடரில் இவருடைய நடிப்பை பார்த்துவிட்டு கலைஞர் கருணாநிதி அந்த நாடகத்தின் தயாரிப்பாளரான நடிகை ராதிகாவைத் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இவரைப் பற்றி விசாரித்திருக்கிறார். இவருடைய காட்சிகள் 4 வாரங்களுக்கு மட்டும் இருக்கும் என்று ராதிகா கூறியதற்கு, இல்லை எம் எஸ் பாஸ்கர் இந்தக் கதாபாத்திரத்தில் இந்த நாடகத்தின் இறுதிவரை வர வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனால், தான் அந்த வாய்ப்பைத் தக்க வைத்துகொள்ள முடிந்தது எனவும் என்னுடைய வாழ்க்கையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் எம் எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்