தமிழில் வெளியான ‘ப.பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களை இயக்கி, நடித்த தனுஷ், அடுத்து ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கினார். தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார்.
தனுஷ், ஆகாஷ் பாஸ்கரன் இணைந்து தயாரிக்கின்றனர். அப்படத்தின் கதாநாயகன் குறித்து எந்தவொரு தகவலும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கௌரவ வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். தேனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

