நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ், தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அவற்றுள் ‘இட்லி கடை’ படத்தின் கதாநாயகனும் அவர்தான். முன்னதாக அருண் விஜய்தான் நாயகன் என தகவல் வெளியானது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு இணையாக ஒரு வில்லன் கதாபாத்திரம் உள்ளதாம். அதற்கு அசோக் செல்வன் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் அவரரால் நடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில், தனுஷுக்கு இப்படத்தில் வில்லனாகி உள்ளார் அருண் விஜய். தற்போது பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார் அருண் விஜய். எனினும் தனுஷ் படத்துக்கான வில்லன் கதாபாத்திரம் அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதால் அதில் நடிக்க முன்வந்துள்ளாராம்.