தனது திரையுலகப் பயணத்தில் ‘வணங்கான்’ முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் நடிகர் அருண் விஜய்.
பாலா இயக்கத்தில் தாம் நடித்துள்ள ‘வணங்கான்’ படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
“திரையுலகில் கால்பதித்த காலத்தில் இருந்து உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும் உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியவனுக்கு, தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பு அளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்,” என்று அருண் விஜய் கூறியுள்ளார்.
தன் பெற்றோரை நெகிழச் செய்தமைக்காக இயக்குநர் பாலாவை தாம் வணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

