உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறார் நடிகர் ஆர்யா.
தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’, ‘வேட்டுவம்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கடைசியாக ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’, ‘திரு மாணிக்கம்’ ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் ஆர்யா.
இந்நிலையில், புதுப் படம் ஒன்றில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்தப் படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்குகிறார்.
ஏற்கெனவே விஷால் நாயகனாக நடித்த ‘எனிமி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஆர்யா. அதில் நாயகனுக்கு இணையாக வில்லன் வேடத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, தன்னுடைய படத்திலும் ஆர்யாவின் கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்படும் என்று உறுதியளித்துள்ளாராம் விநாயக் சந்திரசேகர்.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் நடிக்கிறார்.

