கேரவேனுக்குள் நுழைந்த உதவி இயக்குநர்; காஜல் அகர்வால் அதிர்ச்சி

கேரவேனுக்குள் நுழைந்த உதவி இயக்குநர்; காஜல் அகர்வால் அதிர்ச்சி

1 mins read
f613e7bf-8e67-48e9-a4a3-b8879e139a73
காஜல் அகர்வால். - படம்: பின்டர்ரஸ்ட்

படப்பிடிப்புத் தளத்தில் தமது கேரவேனுக்குள் உதவி இயக்குநர் ஒருவர் திடீரென நுழைந்ததால் நடிகை காஜல் அகர்வால் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புத் தளத்தில் ஓய்வெடுத்தபோது தமக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“ஒருமுறை படப்பிடிப்பு இடைவேளையின்போது எனது கேரவேனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்குப் பணிபுரியும் உதவி இயக்குநர் ஒருவர் முன்னனுமதி இன்றித் திடீரெனக் கேரவேனுக்குள் நுழைந்தார்.

“அவர் தனது மேலாடையைக் கழற்றி, நெஞ்சில் ‘காஜல்’ எனப் பச்சை குத்தியிருந்ததைக் காட்டினார்.

“இந்த எதிர்பாராத நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த எனக்கு அச்சத்தில் கைகால்கள் நடுங்கத் தொடங்கின,” என்று காஜல் விளக்கினார்.

தன் மீதான அன்பால் அவர் பச்சை குத்தியிருந்தாலும், தனிமையில் பெண் இருக்கும் இடத்தில் அனுமதியின்றி நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.

மேலும், இது கடுமையான குற்ற நடவடிக்கைக்கு உட்பட்டது என்று அவர் எச்சரித்தார். பின்னர் அவரது பாதுகாப்பு ஊழியர்கள் அந்த உதவி இயக்குநரை அங்கிருந்து வெளியேற்றினர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திநடிகைஇயக்குநர்அதிர்ச்சி