அட்லி, அல்லு அர்ஜுனுடன் இணையும் டைகர் ஷெராஃப்

1 mins read
2f1bd168-d963-4f81-8b51-3d27ecb39aab
இரு பாகங்​களாக உரு​வாகிவரும் அட்லி, அல்லு அர்ஜுன் இணையும் படத்தில், தற்போது இந்தி நடிகர் டைகர் ஷெராஃப் இணை​வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  - படங்கள்: இந்து தமிழ்திசை

அல்லு அர்​ஜுன் கதாநாயகனாக நடிக்​கும் அறிவியல் புனைகதையைக் கொண்ட திரைப்​படத்தை அட்லி இயக்குகிறார்.

அதிக பொருட்செலவில் உருவாகிவரும் அப்படத்தில் தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்க, ​ஜான்வி கபூர், மிருணாள் தாக்​கூர், ராஷ்மிகா மந்​தனா உள்ளிட்ட முன்னணி நாயகி​இணைந்துள்ளனர். இதில், அல்லு அர்​ஜுன் நான்கு வேடங்​களில் நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன.

அனைத்துலகத் தரத்​துடன் இந்​தி​யா​வில் தயா​ராகும் படமாக இது இருக்​கும். இந்​தியத் திரையுலகில் இது​வரை இல்​லாத அளவில், மிகவும் பிரம்மாண்டமாகப் புதுப்படம் தயாராகி வருவதாக அப்படக் குழு​வினர் தெரி​வித்​திருந்​தனர். இரு பாகங்​களாக உரு​வாகிவரும் அப்படத்தில், தற்போது இந்தி நடிகர் டைகர் ஷெராஃப் இணை​வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், திரைக்காட்சியிடையே மீள்நினைவு (பிளாஷ்பேக்) காட்​சி​களில், முக்​கிய வேடத்​தில் நடிக்க இருப்பதாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து படக்​குழு இன்​னும் அதி​கார​பூர்​வ​மாக எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்