இயக்குநர் அட்லி தற்போது இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி மறுபதிப்பை ‘பேபி ஜான்’ என்ற பெயரில் அவர் தயாரித்திருந்தார். அதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.
தமிழில் ஏற்கெனவே சில படங்களைத் தயாரித்துள்ள அட்லி, மீண்டும் இரண்டு புதுப் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
என்னதான் இந்திப் பட உலகில் பல்வேறு பணிகளில் மூழ்கி இருந்தாலும் மாதந்தோறும் ஒருமுறை சென்னைக்குச் சென்று அங்குள்ள தன் நண்பர்களையும் தன் தாயாரையும் பார்க்கத் தவறுவதில்லை அட்லி.

