தன்னுடைய திருமண வாழ்க்கை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த எதிர்பார்ப்புகளை மனம் திறந்து தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
தற்போது விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை மிகவும் குறைந்துவிட்டது என்றும் அவர் ‘தக் லைஃப்’ பட நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார்.
“திருமணம் செய்துகொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, மக்கள்தான் பிரச்சினை. இன்றைய காலகட்டத்தில், ‘நீ இல்லையென்றால் வேறொருவர்’ என்ற மனநிலை அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்.
“அப்படி இருக்கக்கூடாது. சரியான நேரம் வரும்போது, உங்களுக்கான சரியான நபர் கிடைக்கும்போது திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.
இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில், கமலுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.
இப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அவர் இவ்வாறு பேசியதில் இருந்து, சிம்புவுக்கு எப்போது திருமணம் என அவரது ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.