மகன் விஜய் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருப்பது, அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் தம்பதியருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ‘கூரன்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.
‘ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’, ‘பீப்பிள் ஃபார் அனிமல்’ ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்து அவருக்கு இந்த விருதை வழங்கியுள்ளன. அண்மையில் கோல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார் எஸ்ஏசி.
“சினிமாவில் விலங்குகள் மீது அன்பு காட்டியற்காக எனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கோல்கத்தாவில் உள்ள நட்சத்திரத் தங்குவிடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை வழங்கினார்கள்.
“திரையுலகில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைத்தால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடி தரும். இதற்கு நான் விருது பெற்றுள்ளதே சிறந்த உதாரணம்,” என்று கூறியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.

