சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ படத்தை இயக்கியவர் ரவிக்குமார். அவர் அடுத்து சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
அண்மையில் இருவரும் சந்தித்துப் பேசியபோது, தாம் உருவாக்கியுள்ள புதுக் கதை குறித்து நான்கைந்து வரிகளில் சுருக்கமாகச் சூரியிடம் கூறியுள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.
அது பிடித்துப் போகவே, கதையை விரிவாக மெருகேற்றுமாறு கேட்டுக்கொண்டாராம் சூரி.
அதற்கான பணிகளை ரவிக்குமார் தொடங்கி உள்ளதாகத் தகவல்.

