நடிகர் ரஜினிகாந்த் தனது வெற்றிப் படங்களான ‘பாட்ஷா’, ‘சந்திரமுகி’ படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் தற்போது நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் நெல்சன் சொன்ன கதைதான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.
‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்தப் படத்திலும் நடிக்க இருக்கிறார்கள். இருந்தாலும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன். அவர் மட்டுமின்றி இன்னும் சில பிறமொழி நடிகர்களையும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.