ஊடக விமர்சனங்களுக்குத் தடை: திருப்பூர் சுப்பிரமணிம்

1 mins read
393cec99-87f8-41f3-acaf-ae8a4206e183
திருப்பூர் சுப்பிரமணியம். - படம்: ஊடகம்

திரைப்படங்களுக்கான ஊடக விமர்சனங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென தமிழகத் திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட ஒலிப்பதிவில் அவர் இரண்டு கோரிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளார். புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சிகளைத் தமிழகத்தில் காலை 9 மணிக்குத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்பது திருப்பூர் சுப்பிரமணியத்தின் முதல் கோரிக்கை.

புது திரைப்படங்கள் வெளியாகும்போது இரண்டு வாரத்துக்கு யாரும் விமர்சனங்கள் செய்யக்கூடாது என நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெறவேண்டும் என்பது அவரது இரண்டாவது கோரிக்கையாகும்.

பல கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுத்தால் அதிகாலை சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு, யூ டியூப் தளத்தில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் காலி செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட விமர்சனங்கள் வரைமுறையின்றி வெளியாகின்றன. மேலும் திரையரங்க வளாகங்களில் ரசிகர்களின் கருத்தைக் கேட்டு அதைக் காணொளியாக வெளியிட அனுமதிக்கக்கூடாது என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்