பாலிவுட் இளம் நாயகி அனன்யா பாண்டேவுக்கு (படம்) ஒரு விநோதப் பழக்கம் உள்ளது.
எந்த காரணத்துக்காகப் புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் அதற்கு முன்பு தனிமையில் ஐந்து நிமிடங்களாவது இருப்பாரம். இயன்றால் வாய்விட்டு அழவும் செய்வாராம்.
காரணம், “இவ்வாறு அழுதால் கண்களில் ஒருவித ஒளி தோன்றும். மன அழுத்தம் குறைந்து நிம்மதி உண்டாகும். அது முகத்தில் பிரதிபலிப்பதால் நமது புகைப்படம் மேலும் மெருகேறி அழகாக காட்சியளிக்கும்,” என்று விளக்கம் அளிக்கிறார் அனன்யா பாண்டே.
ஆனால் அவர் அண்மைய எந்தப் பேட்டியிலும் இத்தகைய விளக்கத்தை அளிக்கவில்லை என அவரது தீவிர ரசிகர்கள் கூறுகின்றனர். அனன்யா கூறியதை சிலர் திரித்து செய்தி வெளியிட்டிருப்பதாகவும் ரசிகர்கள் சாடியுள்ளனர். அவரது வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்க சிலர் சூழ்ச்சி செய்வதாகவும் கூறுகிறார்கள்.


