தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமலின் 35வது படமாக உருவாகும் ‘பெல்லடோனா’

1 mins read
0127e69f-573e-4bb6-97d3-95d250fd3222
‘பெல்லடோனா’ பட நாயகிகள் தேஜஸ்வினி ஷர்மா, மேக்சினா பவ்னம் ஆகியோருடன் விமல். - படம்: ஊடகம்

விமல் நாயகனாக நடிக்கும் புதிய படமாக உருவாகிறது ‘பெல்லடோனா’.

மொத்தம் 16 மொழிகளில் இப்படம் தயாராகி வருவதாகச் சொல்கிறார் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி.

இது தன்னுடைய 35வது படம் என்கிறார் விமல்.

“இது திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திகில் கதையாகும். தேஜஸ்வினி ஷர்மா நாயகியாக நடிக்கிறார். மேலும் இன்னொரு நாயகியாக மணிப்பூரைச் சேர்ந்த மேக்சினா பவ்னம் தமிழில் அறிமுகமாகிறார்.

“இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குநர் சந்தோஷ் பாபு.

வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பை தீபக் கவனிக்கிறார். அனைத்துப் பாடல்களையும் இயக்குநரே எழுதியுள்ளாராம்.

“இந்தப் படம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எனக்கும் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். கதைக்கேற்ப மிகப் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி உள்ளார் இயக்குநர்.

“கதைக்கு ஏற்றார்போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைவரும் மிகுந்த திறமைசாலிகள். எங்கள் குழுவில் உள்ள அனைவருமே படம் தொடர்பான எல்லா முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்,” என்கிறார் நாயகன் விமல்.

குறிப்புச் சொற்கள்