தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேவயானி இயக்கிய முதல் குறும்படத்துக்கு விருது

1 mins read
c922e697-d677-4216-97f5-ca0d3a6aa42f
தேவயானி. - படம்: ஊடகம்

கடந்த 30 ஆண்டுகளாக திரையுலகில் நீடித்து வரும் நடிகை தேவயானி, இப்போது இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார்.

இவர் முதன்முறையாக ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.

இளையராஜா இசையமைக்க, நிஹாரிகா, நவீன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தாயை இழந்த, வெளியூரில் பணிபுரியும் தந்தையைக் கொண்ட ஒரு பெண் குழந்தை, எத்தகைய சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது என்பது இந்தக் குறும்படத்தில் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி உள்ளார் தேவயானி.

ஜெய்ப்பூரில் நடந்த அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை இப்படம் பெற்றுள்ளது.

இதனால் பெரும் உற்சாகம் அடைந்துள்ள தேவயானி, பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களுக்கு தனது குறும்படத்தைக் கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்