இந்தியத் திரைத்துறைக்குப் பல ஆண்டுகளாகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக சமந்தாவிற்கு சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக இந்தியத் திரைப்படக் கழகத்தின் சார்பில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வரும் 27ஆம் தேதி இவ்விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
அதில் தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கு இந்தியத் திரையுலகின் மதிப்புமிக்க ‘ஆண்டிற்கான சிறந்த பெண்’ என்ற விருது வழங்கப்பட உள்ளது.
நடிகை சமந்தா ‘ஏ மாய சேசவே’, ‘ஈகா’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘மகாநதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இந்த விருதைப் பெறுவதற்கு பெருமைப்படுவதாக சமந்தா தெரிவித்துள்ளார்.