பாக்யராஜுக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம்

பாக்யராஜுக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம்

1 mins read
ebced0bd-1be4-495b-b7e0-20939517ecef
பாக்யராஜ். - படம்: மாலைமலர்

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜுக்கு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பாக ‘கௌரவ டாக்டர்’ வழங்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டார் பாக்யராஜ்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துவரும் அவர், நீண்டகாலமாக படங்கள் ஏதும் இயக்கவில்லை. எனினும் இன்றளவும் தமிழ்த் திரையுலகின் ‘திரைக்கதை மன்னன்’ என்றுதான் ரசிகர்கள் இவரைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

மிக விரைவில் அனைவரையும் கவரும் வகையில் இணையத் தொடர் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளார் பாக்யராஜ்.

இந்நிலையில் இவரது திரைத்துறை சேவையைப் பாராட்டி டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி அவரது சாதனைகளை அங்கீகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்