தற்போது சமுத்திரக்கனியுடன் ‘வீர வணக்கம்’ படத்தில் நடித்து வரும் பரத், அடுத்து சசிகுமாருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இது குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் படமாக இருக்குமாம்.
நாயகன் சசிகுமாருக்கு இணையான வேடத்தில் பரத் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் 10ஆம் தேதியன்று இப்படத்தின் படப்பிடிப்பு பட்டுக்கோட்டையில் தொடங்கி, மன்னார்குடி, தஞ்சை ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.