யுவன் இசையமைப்பாளராக உருவாக பவதாரிணிதான் காரணம்: வெங்கட் பிரபு உருக்கம்

1 mins read
9465d5c8-8594-4593-bbaf-3f68caf372ee
(இடமிருந்து) வெங்கட் பிரபு, பவதாரிணி, யுவன் சங்கர் ராஜா. - படம்: ஊடகம்

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக உருவாக காலஞ்சென்ற அவரது சகோதரி பவதாரிணிதான் காரணம் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பவதாரிணி காலமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு உருக்கமாகப் பேசினார்.

“யுவனும் பவதாரிணியும் சிறு வயது முதலே மிகவும் பாசமாக இருப்பார்கள். யுவன் இசையமைப்பாளராக வேண்டும் என ஊக்குவித்தது பவதாரிணிதான். உண்மையில் யுவனுக்கு குருவே பவதாரிணிதான். யுவனே இதைப் பலமுறை கூறியுள்ளார்,” என்றார் வெங்கட் பிரபு.

வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் யுவன் சங்கர் ராஜா இந்த நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் அவரது நினைவு முழுவதும் பவதாரிணிதான் நிறைந்திருப்பார் என்றும் வெங்கட் பிரபு மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்