‘பிரதர்’ படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை பூமிகா சாவ்லா, தான் நடிக்கவேண்டிய சில படங்களில் நடிக்கமுடியாமல் போனதாகத் தெரிவித்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை அவர் தவறவிட்டதாகச் சொன்னார். அந்தப் படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும் அந்தக் காலகட்டத்தில் அம்மா கதாபாத்திரம் தனக்குப் பொருந்தாது எனத் தான் எண்ணியதாகவும் கூறினார் பூமிகா சாவ்லா.

