பெரும் சதி நடக்கிறது: ஜானி வாக்குமூலம்

பெரும் சதி நடக்கிறது: ஜானி வாக்குமூலம்

1 mins read
791daf99-b225-4ca1-9279-132b688b2f7f
நடன இயக்குநர் ஜானி. - படம்: ஊடகம்

நடன இயக்குநர் ஜானி, பாலியல் வழக்கில் சிக்கியது திரையுலகத்தினர் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

அவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அறவே மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

“என் மீது புகார் அளித்துள்ள அப்பெண், வாய்ப்பு கேட்டு என்னை அணுகினார். ஒரு கட்டத்தில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்.

“புஷ்பா’ பட இயக்குநர் சுகுமாருக்கு இது தெரியும். ஒருமுறை அவரும்கூட அந்தப்பெண்ணை நேரில் அழைத்து அறிவுரை கூறினார். ஆனாலும் அப்பெண்ணிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

“என் மீதான இந்தப் புகார்களின் பின்னணியில் பெரும் சதி இருப்பதாக நம்புகிறேன்.

“என்னுடைய வேகமான வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர்தான் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்,” என்று ஜானி வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

தனது கணவர் குற்றமற்றவர் என்று ஜானியின் மனைவி அண்மையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமாரின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடத் தொடங்கி இருக்கிறது.

எனினும், இது தொடர்பாக இயக்குநர் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்