தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகிகளாக வலம்வந்து, காதல் தோல்வி காரணமாக திருமண வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வரும் ஏழு பிரபலமான நடிகைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
திரிஷா: 40 வயதை எட்டிய பின்னரும் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்தவரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் திரிஷா. பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் இவர் டேட்டிங் செய்து வந்த நிலையில், சிலரது சூழ்ச்சி காரணமாக இவரது காதல் தோல்வியுற்றதாகக் கூறப்பட்டது.
பின்னர் வருண்மணியன் என்கிற தயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திடீர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நின்றுபோனது.
திருமணம் என்கிற வார்த்தையை எடுத்தாலே பயப்படும் திரிஷா, “திருமணம் செய்து கொள்ளாததற்கு பயம் தருவது விவாகரத்துதான்,” என அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்விதான் திரிஷா திருமணமே வேண்டாம் என கூறக் காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அனுஷ்கா: தெலுங்குத் திரையுலகம் மூலம் அறிமுகமாகி, தமிழில் ‘இரண்டு’ படம் மூலம் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் ‘சிங்கம்’ , ‘அலெக்ஸ் பாண்டியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அனுஷ்கா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராகவே உள்ளார். தன்னுடைய 40 வயதை கடந்த பின்னரும், இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஜாதகத்தில் உள்ள பிரச்சினை என்பது ஒருபுறம் இருந்தாலும் பிரபாஸ் மீதான காதல் என்று டோலிவுட் திரையுலகில் சில தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
நக்மா: பாலிவுட்டில் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை நக்மா.
1994ல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், பிரபுதேவாவின் ஜோடியாக நக்மா அறிமுகமான படம் ‘காதலன்’.
இந்தப் படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து ‘ரகசிய போலிஸ்’, ‘வில்லாதி வில்லன்’, ‘லவ் பேர்ட்ஸ்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நடிகைக்கான வாய்ப்பு குறைந்தபின்னர் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த நக்மா, கடைசியாக தமிழில் ‘சிட்டிசன்’ படத்தில்தான் நடித்திருந்தார். பின்னர் போஜ்புரி, மராத்தி போன்ற மொழிகளில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழக அரசியலிலும் கலக்கி வந்த நக்மா, பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியை காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. பின்னர், நடிகர் சரத்குமாருடன் தொடர்பில் இருப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட காதல் தோல்வியின் காரணமாக திருமணமே வேண்டாம் என முடிவெடுத்து தற்போது வரை தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
கனகா: பிரபல நடிகை தேவிகாவின் ஒரே மகளான கனகா, 1989ல் மாபெரும் வெற்றிபெற்ற ‘கரகாட்டக்காரன்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.
பின்னர் ரஜினி, பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த கனகாவை அவருடைய தாயார் தேவிகாவின் இறப்பு ஒரு பக்கம் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில், இவர் ஒருவரைக் காதலித்து வந்தார். ஆனால், அந்தக் காதல் தோல்வி அடைந்ததால் இனி யாரையும் வாழ்க்கையில் நம்பக் கூடாது என முடிவெடுத்து 51 வயதை எட்டிய பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
சித்தாரா: ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த நடிகை சித்தாரா. ‘புது வசந்தம்’, ‘புரியாத புதிர்’ உள்ளிட்ட பல படங்களிலும் நாயகியாக நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். காதல் தோல்வி காரணமாக சித்தாரா திருமணம் செய்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
தபு: பாலிவுட் நடிகையான தபு, தனது 53 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். அஜய் தேவ்கன் போன்ற சில பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்பில் இருந்து வந்த நிலையில், அவரின் காதல் திருமணத்தில் முற்று பெறாததால் திருமணமே வேண்டாம் என தற்போதுவரை இருந்து வருகிறார். தபு இந்தியில் மட்டுமின்றி, தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
கௌசல்யா: கோலிவுட் திரையுலகில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. இதைத்தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வந்த நடிகை கௌசல்யா, விஜய் - சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானவர்.
தற்போது அக்கா, அம்மா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் இவர், 44 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காதல் தோல்விதான் காரணமென்று சில தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.