பாலிவுட் நடிகர்களின் நடமாடும் அரண்மனை

1 mins read
866ffcc1-7c6f-4751-be7a-99d3cb5ee7c4
ஷாருக்கானின் நடமாடும் அரண்மனை (கேரவன்) - படம்: பாலிவுட் பப்பிள்

பிரபல வடிவமைப்பாளர் வினிதா சைதன்யா, பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் வேனிட்டி வேன்களை எவ்வளவு பிரம்மாண்டமாக வடிவமைக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஷாருக்கானின் பிரம்மாண்ட வேனிட்டி வேனுக்குள் பல கோடி ரூபாய் செலவில் உடற்பயிற்சி செய்வதற்காக ஒரு ‘மினி ஜிம்’ அமைக்கப்பட்டுள்ளது.

வசதி, சௌகரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

தீபிகா படுகோன் தனது தேவைக்கேற்ப இரண்டு வேன்களைப் பயன்படுத்துகிறார். ஒன்று குறுகிய தூரப் பயணங்களுக்காகவும் மற்றொன்று படப்பிடிப்புத் தளங்களில் தங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நடிகர்கள் தங்கள் வேன்களை ஒரு வீடு போலவே கருதுவதால், தலைசிறந்த வடிவமைப்பாளர்களைக் கொண்டு பல கோடி ரூபாய் செலவில் அதன் உட்புறங்களை அலங்கரிக்கின்றனர்.

ஒரு வீட்டைப் போலவே சகல வசதிகளுடன் கூடிய இந்த வேன்கள், படப்பிடிப்புத் தளங்களில் நடிகர்களுக்கு ஒரு நடமாடும் அரண்மனையாகவே திகழ்கின்றன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்

தொடர்புடைய செய்திகள்