தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முத்தக்காட்சியில் முந்திக்கொண்ட தம்பி: விஷ்ணு விஷால் நகைச்சுவை

2 mins read
6953ac77-58f9-480a-86c5-c28cb91a87da
‘ஓஹோ எந்தன் பேபி’ படப் பூசையில் ருத்ரா, மிதிலாவுடன் விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை ‘ஃபைவ் ஸ்டார்’ பட நாயகர்களில் ஒருவராக நடித்த கிருஷ்ண குமார் இயக்குகிறார்.

தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து, இப்படத்தைத் தயாரிப்பதும் விஷ்ணு விஷால்தான்.

ஏ.ஆர்.முருகதாசிடம் ‘தர்பார்’ உட்பட பல படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளாராம் ருத்ரா.

“என் அப்பாவின் சகோதரர் மகன்தான் ருத்ரா. என் சித்தப்பாவும் பல படங்களில் நடித்துள்ளார். நான் திரையுலகுக்கு வர உதவியவர்.

“இதுவரை 21 படங்களில் நடித்து முடித்துள்ளேன். ஆனால், நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்ததில்லை. ஆனால், என் தம்பியோ முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்துவிட்டான்.

“இதில் மிதிலா பாஸ்கர் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை மாதம் படம் வெளியாகும்,” என்று கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

அந்தக் கால புகழ்பெற்ற பாடலான, ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடல் இதில் இடம்பெறுகிறது. கதைப்படி, விஷ்ணு விஷால் நடிகர் கதாபாத்திரத்திலேயே திரையில் தோன்றுவாராம். ருத்ரா உதவி இயக்குநராக நடித்துள்ளார்.

இதற்கிடையே, ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடித்த ‘லால்சலாம்’ படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது எதிர்பார்த்த வரவேற்பின்றி தோல்விப் படமாகவே அமைந்தது. இத்தனைக்கும் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

முக்கியமான காட்சிகள் அடங்கிய ‘ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போனதே படத்தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.

படம் வெளியாகி, ஓராண்டாகியும் ஓடிடி தளம் எதிலும் ஒளிபரப்பாகவில்லை. இப்போதுதான் அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாம்.

திரையரங்குகளுக்கான பதிப்பில் இடம்பெறாத காட்சிகளும்கூட ஓடிடிக்கான பதிப்பில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்