கமல்ஹாசனின் 237வது படத்தை பிரபல சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவ் சகோதரர்கள் (அன்புமணி, அறிவுமணி) இயக்க உள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இச்சகோதரர்கள் தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், கமல் நடிக்கும் படத்தை அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் இயக்குநர் மணிரத்னமும் இணைந்துள்ள ‘தக்லைஃப்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதையடுத்து, பா.ரஞ்சித், நெல்சன் திலீப் குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து கமல் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.