ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதல்

1 mins read
99cd3a6d-2506-4f03-8e4a-3bdc68fdc536
ஐஸ்வர்யா ராய். - படம்: தி இந்து / இணையம்

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

மும்பையில் புதன்கிழமை (மார்ச் 26) ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை அறிந்து காரைவிட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்த காணொளி சமூக ஊடகத்தில் வெளியாகி பரவலானது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சம்பவத்தின்போது நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் கார்மீது பேருந்து மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமா