தனுஷின் படம் நிறைவு பெற்றதால் கேக் வெட்டி கொண்டாட்டம்

1 mins read
ecaf7e25-964f-4b87-9995-66ccbb7cb65e
தனுஷின் 54வது படம் நிறைவுற்றதால் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். - படம்: தினமலர்

நடிகர் தனுஷ், தற்போது ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இது தனுஷின் 54வது படமாக உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராமநாதபுரம், திண்டுக்கல், பரமக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தனுஷ், மமிதா பைஜூ, படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்