இரண்டு படங்களைத் தயாரிக்கும் கனடியத் தமிழர்

1 mins read
9a787df8-d18f-4228-a843-c6d5388e64b3
ஆர்ஜே சாய் - படம்: ஊடகம்

கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் வானொலி படைப்பாளரான ஆர்ஜே சாய், ஒரே நேரத்தில், ‘பிரெய்ன்’, ‘ஷாம் தூம்’ ஆகிய 2 திரைப் படங்களைத் தயாரிப்பதாக இந்து தமிழ் திசை தகவல் தெரிவிக்கிறது.

இதில் ‘பிரெய்ன்’ படத்தை, விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். இவர், ‘தாதா 87’, ‘பவுடர் ‘, ‘ஹரா’ படங்களை இயக்கியவர். ‘ஷாம் தூம்’ படத்தை நவீன்குமார் இயக்குகிறார்.

இந்த அறிவிப்பை தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட்12ஆம் தேதி சாய் வெளியிட்டார். ஆர்ஜே சாய் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் இந்தப் படங்களைத் தயாரிக்கும் ஆர்ஜே சாய், ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

“கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ்த் திரைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது என் லட்சியம். இந்தப் படங்கள் வாயிலாக என்னுடைய பயணத்தைத் தொடங்குகிறேன். சிறந்த கதைகளைக் கொண்ட படங்களையும் திறமையான இளைஞர்களையும் எனது நிறுவனம் ஊக்குவிக்கும். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப் படங்களில் பணியாற்ற உள்ளனர்,” என்று சாய் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்