தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அம்மாவைப் போல் சாதிக்க இயலாது: ஜான்வி கபூர்

1 mins read
2b932874-5a6c-4c25-a4b0-7717b7771ee1
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

தமது தாயார் ஸ்ரீதேவியைப் போல் திரையுலகில் தம்மால் சாதிக்க இயலாது என ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

இவர் நடித்த ‘சன்னி சன்ஸ் காரி கி துளசிகுமாரி’ இந்திப் படம் அக்டோபர் 2ஆம் தேதி திரைகாண உள்ளது. இதில் வருண் தவான் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூர், தன் தாயாருடன் தன்னை ஒப்பிடுவது சரியல்ல எனக் குறிப்பிட்டார்.

“என் அம்மா நான்கு வயதில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி என என் தாயார் 300 படங்களில் நடித்துள்ளார். என்னால் அந்த அளவுக்கு நிச்சயம் சாதிக்க இயலாது.

“எனினும், அவரது பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து எனக்கான கதாபாத்திரங்களை கவனமாகத் தேர்வு செய்து நடிக்கிறேன். அந்த வகையில், அவரது இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதைவிட, அவரது நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் மனத்தில் வலுத்துள்ளது,” என்றார் ஜான்வி கபூர்.

குறிப்புச் சொற்கள்