நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாராவுடன் துனியா விஜய், ரெஜினா கசண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு ஆகியோர் அப்படத்தில் நடிக்கின்றனர்.
அப்படத்தின் பூஜை மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.
மேலும், படப்பிடிப்பு கடந்த சில நாள்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.
நயன்தாராவிற்கும் இயக்குநர் சுந்தர்.சிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வதந்திகள் பரவின.
அதுகுறித்து சுந்தர்.சியிடம் கேட்டபோது, “எனக்கும் நயன்தாராவிற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்பான நடிகை, படப்பிடிப்பில் ஒரு அரை மணி நேரம் இடைவெளி கிடைத்தால் மட்டுமே ஓய்வு எடுக்கச் செல்வார்.
“இல்லையென்றால் படப்பிடிப்புத் தளத்திலேயே இருப்பார். அது அவருடைய பழக்கம்,” என நயன்தாரா குறித்து கூறியுள்ளார்.
மேலும், எல்லா ஊகங்களுக்கும் கிசுகிசுகளுக்கும் தன்னால் பதிலளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.