தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆதிவாசி’ அமீர்கான் அல்ல

1 mins read
5b0271da-942c-4b71-a176-37babbadb881
மும்பையில் ஆதிவாசிபோல் வேடமிட்டுச் சென்ற ஆடவர் நடிகர் அமீர்கான் என்ற புரளி எழுந்தது. - படம்: Eros Zoom / யூடியூப்

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் ஆதிவாசி தோற்றத்தில் ஒருவர் நடமாடும் காணொளி அண்மையில் பலரால் பகிரப்பட்டது.

ஆதிவாசிபோல் வேடமிட்டுச் சென்றது பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் என்ற புரளியும் தலைதூக்கியது. அதனைத் தொடர்ந்து அந்த ‘ஆதிவாசி’, நடிகர் அமீர்கான் அல்ல என்று அவரின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய பொய்த் தகவல்கள் அனைத்தையும் நம்பவேண்டாம் என்றும் அமீர்கான் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளதாகப் பல இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் காணொளி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிரப்பட்டது. ஆதிவாசி போல் வேடமிட்ட ஒருவர் சாலைகளின் நடுவே செல்வது போலக் காட்சிகள் காணொளியில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதிரைச்செய்திசமூக ஊடகம்

தொடர்புடைய செய்திகள்