தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’: சமுத்திரக்கனி புகழாரம்

1 mins read
43f61b6f-6e26-4421-a638-301ffbdbc805
டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் வரும் காட்சி. - படம்: ஊடகம்

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மிகச் சிறந்த படம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் சமுத்திரகனி.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பல்வேறு இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சமுத்திரகனி பேசும்போது, “இந்த நூற்றாண்டில் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படம் பார்த்தவுடன் அவ்வளவு கனமாக இருந்தது, பெருமையாகவும் இருந்தது.

“இப்படம் பார்த்தவுடன் சசிகுமாரை கையெடுத்து கும்பிட வேண்டும் என்று தோன்றியது. இப்படியொரு படம் இதுவரை யாரும் எடுத்ததில்லை. உலகத்தில் இருக்கும் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடக் கூடிய படமாக இது இருக்கும். சசிகுமாருக்கு ‘சுப்பிரமணியபுரம்’, எனக்கு ‘நாடோடிகள்’ போல் அபிஷனுக்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’” என்று பேசினார் சமுத்திரகனி.

மேலும் இயக்குநர் சசி, தா.செ.ஞானவேல், விஜய் ஆண்டனி, ராஜுமுருகன், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினருக்கு விழாவில் வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்