தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைவன் தலைவி

1 mins read
c3de485a-1438-4539-b4ff-a808cd44c4d1
விஜய் சேதுபதி, நித்யா மேனன். - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்திருக்கும் படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கின்றார்.

இதில் சேலம் சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், யோகி பாபு, ரோசினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு, சுவரொட்டி, காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்