‘தக் ஃலைப்’ படம் வெளியாவதற்கு இரண்டு நாள்கள் முன்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது படக்குழு.
அதில் ‘மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தக் லைப்’ திரைப்படம் இணையத்தளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பேரிழப்பு ஏற்படும். அதனால் ‘தக் ஃலைப்’ திரைப்படம் இணையத்தளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ‘தக் லைப்’ படத்தை இணையத்தில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ‘தக் ஃலைப்’ திரைப்படம் வெளியான முதல் நாளே இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.