சென்னை சாலைக்கு சீர்காழி கோவிந்தராஜன் பெயர்

சென்னை சாலைக்கு சீர்காழி கோவிந்தராஜன் பெயர்

1 mins read
bfec2c0c-57fc-4474-a83d-a47487f6e588
சீர்காழி கோவிந்தராஜன். - படம்: கல்கி ஆன்லைன்

சென்னையில் உள்ள சாலைக்கு பழம்பெரும் பின்னணி பாடகர் காலஞ்சென்ற சீர்காழி கோவிந்தராஜனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சீர்காழி பகுதியில் பிறந்தவர் கோவிந்தராஜன். ஆன்மிகப் பாடல்கள் மூலம் ஏராளமான பக்தர்களைப் பரவசப்படுத்தியவர். தனது திரைப்பாடல்கள், தனிப்பாடல்கள் மூலம் ஏராளமானோரை மகிழ்ச்சிப்படுத்தியவர்.

மொத்தம் 16,000 பாடல்களைப் பாடியுள்ளார். இசைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவையைக் கௌரவித்து அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது இந்திய அரசு.

தனது 56வது வயதிலேயே காலமானார் சீர்காழி கோவிந்தராஜன். இவர் தனது குடும்பத்தாருடன் சென்னையில் உள்ள மந்தவெளிப்பாக்கம் பகுதியில்தான் நீண்டகாலம் வசித்து வந்தார்.

எனவே, அவரது வீடு அமைந்துள்ள ‘ஈஸ்ட் சர்க்குலர்’ சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென அவரது மகன் டாக்டர் சிவ சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தார் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதை ஏற்று, அக்குறிப்பிட்ட சாலைக்கு சீர்காழி கோவிந்தராஜன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்