தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறும்படத்திற்காகப் பாடல் எழுதிய சேரன்

1 mins read
f990adc1-f477-4cd0-a17e-7748afaa8fc5
‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை’, ‘திருமணம்’ போன்ற படங்களுக்கும் இயக்குநர் சேரன் பாடல்கள் எழுதியுள்ளார். - படங்கள்: ஊடகம்

மனித உளவியல் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாகிவரும் குறும்படம் ‘பேரடாக்ஸ்’.

துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அப்படத்தின் முன்னோட்டக் காட்சியை இயக்குநரும் நடிகருமான சேரன், எம்.சசிகுமார், நடிகர் பிரசன்னா, நடிகர் ஆரி அர்ஜுனன், இயக்குநர் வெங்கட்பிரபு ஆகியோர் வெளியிட்டனர்.

அப்படத்திற்காக இயக்குநர் சேரன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு முன்னதாக அவர், ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை’, ‘திருமணம்’ போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒரு மனிதனின் உளவியல் பற்றி இந்தக் குறும்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் தமது குடும்பத்தைவிட்டு விலகிச் செல்கிறான். இந்நிலையில், ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை ‘பேரடாக்ஸ்’ பார்வையாளர்களுக்கு விளக்கும்,” என 25 நிமிடங்கள் ஓடும் அக்குறும்படத்தின் இயக்குநர் பிரியா கார்த்திகேயன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்