கின்னஸ் புத்தகத்தில் சிரஞ்சீவி

1 mins read
823abac9-4cfa-44d3-a80d-9f415fd2c633
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்காக சிரஞ்சீவிக்கு (நடுவில்) பாலிவுட் நடிகர் அமீர் கான் (வலது) விருது வழங்கினார். - படம்: தி இந்து / இணையம்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனான சிரஞ்சீவி, திரையுலகப் பின்னணி இல்லாமல் நடிக்க வந்து ‘சூப்பர்ஸ்டார்’ நிலைக்கு உயர்ந்தவர்.

இவர் இதுவரை 156 படங்களில் நடித்துள்ளார். 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியான ‘பிராணம் கரீது’ என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இந்தியத் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான திரைப்பட நட்சத்திரமான ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி இப்போது கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். 45 ஆண்டுகளில் 156 படங்களின் 537 பாடல்களில் 24,000 நடன அசைவுகளைச் செய்ததற்காக சிரஞ்சீவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 22) இந்த விருது வழங்கப்பட்டது.

பாலிவுட் நடிகர் அமீர் கான், சிரஞ்சீவிக்கு அந்த விருதை வழங்கி கெளரவித்தார்.

குறிப்புச் சொற்கள்