தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ ஒரு கிராமத்துக் கல்லூரிக் காதல் கதை

1 mins read
7fcd2060-b809-4b78-b7ae-72d1aec95695
கெளஷிக் ராம், பிரதிபா. - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநர் எஸ்ஜெஎன் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் படமாக உருவாகிறது ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ (ஒரு கிராமத்துக் கல்லூரிக் காதல் கதை).

கும்பகோணம் கல்லூரி பின்னணியில் நடைபெறும் கதையில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, ‘கொண்டல்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

மேலும், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், ஆருள் டி. ஷங்கர், ரவி விஜே, சஞ்சய்வர்மன், விக்கி, சத்யா உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். என். ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

“கல்லூரியில் உடன் படிக்கும் ஒரு பெண்ணை நாயகன் ஒரு தலையாக காதலிக்க, சக மாணவியான மிகவும் சக்திவாய்ந்த ஒருவரின் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நாயகனும் நாயகியும் இணைய, அது நாயகன், நாயகியின் வாழ்வையே புரட்டிப்போட என ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ விறுவிறுப்பாக செல்லும். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது,” என்கிறார் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன்.

குறிப்புச் சொற்கள்