நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் 173வது படத்தை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கிறது.
இந்நிலையில், அப்படத்தை சுந்தர்.சி இயக்குவார் என அறிவிப்பு வெளியானது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இந்தப் படத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார் சுந்தர்.சி.
எனினும், இதற்கான காரணம் என்ன என்பதை இதுவரை அவர் தெரிவிக்கவில்லை.
சுந்தர்.சி கூறிய கதை ரஜினிக்குப் பிடிக்காததால்தான் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
ரஜினியை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. தற்போது சிபி சக்கரவர்த்தி பெயரை அறிவித்துள்ளது ராஜ் கமல் ஃபிலிம்ஸ்.
இவர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தை இயக்கியவர். இந்தப் புதுப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
படத்தில் கமல்ஹாசனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
புதுப்பட அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் நிலவுகிறது.

