‘ரஜினி 173’ குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்: சிபி சக்கரவர்த்தி

‘ரஜினி 173’ குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்: சிபி சக்கரவர்த்தி

1 mins read
ec1db7d6-a7dd-48ae-9c2d-f5493b95bd3c
சிபி சக்கரவர்த்தி. - படம்: ஜீ நியூஸ்

ரஜினியின் 173வது படத்தை இயக்குகிறார் சிபி சக்கரவர்த்தி.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் நாயகனாக நடிக்கும் ‘வித் லவ்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், புதுமுக இயக்குநரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது பெரிய விஷயம் என்றார்.

அபிஷனிடம் முதல் படத்தில் நாயகனாக நடிப்பதற்கான பதற்றம் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் பெரிய நட்சத்திரமாக திரையுலகில் வலம்வருவார் என்றும் பாராட்டு தெரிவித்தார் சிபி சக்கரவர்த்தி.

கதாநாயகி அனஸ்வராவின் நடிப்பில் நடிகர் அஸ்வினின் சாயல் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ரஜினி நடிப்பில் உருவாகும் ‘தலைவர்-173’ பட அறிவிப்புக்குப் பிறகு பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஒருசிலரிடம் ‘இவனெல்லாம் தலைவர் படத்தை இயக்குகிறானாம்’ என்ற சின்ன பதற்றத்தைப் பார்க்க முடிகிறது.

“’தலைவர்-173’ படம் பார்க்கும் அனைவருமே நிச்சயம் மனநிறைவு அடைவர். இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இது சத்தியம்,” என்றார் சிபி சக்கரவர்த்தி.

குறிப்புச் சொற்கள்