1980களில் தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகியாகவும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை அம்பிகா. தமது திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
தற்போது மீண்டும் குணச்சித்திர வேடங்களிலும் சின்னதிரை தொடர்களிலும் நடித்து வரும் அம்பிகா, தமது திருமண முறிவு குறித்து கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“திருமண முறிவு என்பது எந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் நடக்கக்கூடிய ஒன்று. இரண்டு பேருக்கு இடையே புரிதல் இல்லையென்றால் அந்த உறவு முறிந்துவிடும்.
“அரசியலில் இருக்கும் இருவர் பிரிந்தால் அதற்கு அரசியல் எப்படி காரணம் ஆகாதோ, அதேபோல்தான் சினிமாவும்.
“தம்பதிகளுக்குள் எவ்வளவு சம்பளம் அல்லது அந்தஸ்து இருந்தாலும், பிரிய வேண்டும் என்ற சூழல் உருவானால் பிரிந்துதான் ஆக வேண்டும்; அங்குப் பணத்தால் எதையும் தடுத்துவிட முடியாது.
“என்னை மற்றவர்கள் நல்லவள் என்று சொல்வதால் நான் நல்லவளாகி விடமாட்டேன், கெட்டவள் என்று சொல்வதால் கெட்டவளும் ஆகிவிடமாட்டேன். தங்கள் வீட்டில் பிரச்சினை இருப்பவர்கள்தான் மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள்,” என தைரியமாகத் தெரிவித்துள்ளார் அம்பிகா.

