‘கோட்’ படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில், புது கார் ஒன்றை வாங்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
ரூ.300 கோடி செலவில் உருவான அப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.125 கோடியைக் கடந்தது.
படம் வெளியாகி ஆறு நாள்கள் கடந்துவிட்ட நிலையில், மொத்த வசூல் ரூ.312 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, ‘ரேஞ்ச் ரோவர்’ என்ற புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் வெங்கட் பிரபு. இதன் விலை ரூ.86 லட்சம் எனக் கூறப்படுகிறது.

