நகைச்சுவை நடிகர் புகழ் பாடகராக மாறியுள்ளார்.
அவர் நடித்து வரும் பெயரிடப்படாத புதிய படத்தில், முதல் முறையாக ஒரு பாடலைப் பாடியுள்ளாராம்.
சாஜோ சுந்தர் இயக்கியுள்ள இப்படத்துக்கு, சுபாஷ் முனிரத்தினம் இசையமைத்துள்ளார். கலைக்குமார் எழுதிய பாடலை, நடிகர் புகழுடன் இணைந்து விருஷா பாலு, ஜகதீஷ் குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள புகழ், அண்மைக் காலமாக குணச்சித்திர வேடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் கதை நாயகனாக நடித்த ‘ஸு கீப்பர்’ படம் அண்மையில் வெளியானது.

