யுவன் சங்கருக்கு நன்றி சொன்ன ரெடின் கிங்ஸ்லி

1 mins read
46781b17-0b92-411c-8b83-7dad77a2c738
மனைவியுடன் கிங்ஸ்லி. - படம்: ஊடகம்

யோகி பாபுக்கு அடுத்தபடியாக, ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை இல்லாத தமிழ்ப் படங்களின் எண்ணிக்கையும் குறைவு எனலாம்.

இவரது நவைச்சுவைக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது.

அண்மையில் ஒரு விழாவில் பேசியபோது தனது காதல் அனுபவங்களை விவரித்தார் டெனின். அதைக்கேட்டு விழாவுக்கு வந்த யுவன் சங்கர் ராஜா முகத்தில் மகிழ்ச்சியுடன் கூடிய புன்னகை பூத்தது.

“பொதுவாக காதலைச் சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைப் பாடித்தான் சொல்வார்கள். ஆனால், என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலைத்தான் என் காதலுக்காக பாடினேன். இதற்காகவே யுவன் சங்கருக்கு நன்றி,’’ என்றார் ரெடின் கிங்ஸ்லி.

குறிப்புச் சொற்கள்