வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் நிலையத் தொடக்க விழா மதுரையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
“நான் படிப்பை முடித்துவிட்டு கணக்காய்வாளர் ஒருவரிடம் உதவியாளராக ஆறுமாதம் பணிபுரிந்தேன். அப்போது அரசு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வது சிரமமாக இருந்தது,” என அந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதிபதி கூறினார்.
“ஆனால், தற்போது நிலைமை அப்படியில்லை. இணையம் மூலம் எளிதாக நாம் அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. பான் அட்டை விண்ணப்பிக்கும் முறையும் அதில் இருக்கும் சிக்கல்களும் படங்கள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்,” என்றார் அவர்.
‘வரி செலுத்துவது முக்கியமும் அவசியமுமானது எனக் கூறிய அவர், நல்ல முறையில் ஒழுங்காக வரி செலுத்தும் குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

