சித்தார்த் அண்மையில் கொடுத்த நேர்முகப் பேட்டியில் ‘புஷ்பா’ படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு வந்த கூட்டம் பற்றி சர்ச்சையான கருத்தைக் கூறி இருப்பது தற்பொழுது பேசுபொருளாகி உள்ளது.
நடிகர் சித்தார்த், யூடியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘புஷ்பா 2’ படத்தின் முன்னோட்டக் காட்சி பாட்னாவில் நடைபெற்றது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்தியாவில் கூட்டம் கூடுவது என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல. கட்டுமானப் பணிகளுக்காக இயந்திரங்களைக் கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும்.
“பாட்னாவில் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கு விளம்பரம்தான் காரணம். ஒரு பெரிய மைதானத்தை ஏற்பாடு செய்துவிடடால் கூட்டம் கூடும் .
“இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் தகுதிக்கும் சம்பந்தம் இல்லை. அப்படிப் பார்த்தால் எல்லா அரசியல் கட்சிக்கும்தான் கூட்டம் கூடுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஏன் வெற்றிபெறவில்லை?
“எல்லோருக்கும் கூட்டம் கூடத்தானே செய்கிறது. ஆகவே, கரகோஷமும், கூட்டம் கூடுவதும் இயல்பு. அதனால் கூட்டத்தை வைத்து அந்தப் படம் வெற்றிபெறும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது,” என்று கூறியுள்ளார். அவர் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ளது.