தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகஸ்ட் 2ல் ‘கூலி’ முன்னோட்டம், இசை வெளியீட்டு விழா

1 mins read
83cd34d0-be63-447d-a5c0-a233e518f923
கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.  - படம்: சன் பிக்சர்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான காணொளியையும் படக்குழு வெளியிட்டது.

அதேபோல் படத்தின் முன்னோட்டம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘கூலி’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘சிக்கிடு’, ‘மோனிகா’ பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

படத்தின் விளம்பரப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்